தொடரும் கனமழை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடரும் கனமழை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிறைந்துள்ளன. தொடர் மழையினால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொட்ர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளிலும் மின்வாரியம், மின்சாரத்தைத் துண்டித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுப்பளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in