அடுத்த 3 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகிறது மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகிறது மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் இருந்து இடியுடன் கூடிய கனமழை சென்னையில் பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 27 சதவீதம் அதிகளவில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் மழை தொடரும் என்றும், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in