மலையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க முதல்வர் வலியுறுத்தல்

மலையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க முதல்வர் வலியுறுத்தல்

கேரளத்தில் இன்றுமுதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளத்தில் ஏற்கெனவே கடந்த 15 நாள்களுக்கும் மேலாகக் கனமழை பெய்து வருகிறது. அங்கு கடந்த ஒருவாரத்தில் மட்டும் 250 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் கேரள மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பொன்முடி, கல்லார்குட்டி, ரெட்டையாறு, கீழ்பெரியாறு ஆகிய அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருவதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளத்தில் மலையோரப் பகுதிகளில் இருப்போர் எச்சரிக்கை யுடனும், விழிப்புடனும் இருக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரளத்தில் பேய்துவரும் தொடர் மழையால் பல்வேறு நீராதாரங்கள் நிரம்பியுள்ளன. இதனால் அணயோர, கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ச்சியான மழையோடு, கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றும் வீசிவருவதால் கடற்கரை யோரங்களில் உள்ள வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in