கனமழையால் கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

 கேரளாவில் கனமழை
கேரளாவில் கனமழைகனமழையால் கேரளாவில் 2 மாவட்டங்ளுக்கு ரெட் அலர்ட் : எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

கேரளா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் 2 மாவட்டங்களில் ரெட் அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் எர்ணாகுளம் மாவட்டத்தில் நேற்று முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், எர்ணாகுளத்தில் இன்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அணையோரப் பகுதிகளிலும், நிலச்சரிவு அடிக்கடி ஏற்படும் பகுதிகளிலும் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இடுக்கி, கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், ஆலப்புழா, பத்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கேரளத்தில் எலிக்காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் வேகமாகப் பரவிவரும் நிலையில் மழைபெய்து வருவதால் சுகாதாரப் பணியாளர்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in