இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இன்று  11  மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் வரலாறு காணாத மழைப்பொழிவு நேற்று ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. பல இடங்களில் இதுவரை மின்சாரம் இல்லாத நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதே போல மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

சென்னையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை இன்று அதிகாலை வரை நீடிக்கிறது. பெருங்குடி, கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போதுவரை கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவ்ததுள்ளது.. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நாளை இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in