மீண்டும் மிரட்ட வருகிறது: நவம்பர் 20-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

மீண்டும் மிரட்ட வருகிறது: நவம்பர் 20-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 20-ம் தேதியன்று தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடலில்  இன்று இரவுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னரே அறிவித்துள்ளது.  அதன் விளைவாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை  பெய்யக்கூடும்  எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின்  விளைவாக  வரும்  20-ம் தேதியன்று தமிழ்நாட்டில்  ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

"சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பணி கூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாக கூடும்.

இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு- வங்கக்கடல் பகுதியில் வலுப்பெறும். இதனால் மீனவர்கள் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதியில் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்பதால் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்" என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in