சென்னையில் தொடரும் கனமழை: திணறும் போக்குவரத்தால் பொதுமக்கள் அவதி

சென்னையில் தொடரும் கனமழை: திணறும் போக்குவரத்தால் பொதுமக்கள் அவதி

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், தி. நகர், தாம்பரம், பல்லாவரம் எனச் சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சாலைகளில் தேங்கும் நீரால் சென்னை மக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி, வண்டலூர், நாவலூர்,  எனப் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, ஆவடி, உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு பணிக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்து விட்டதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்த  நிலையில், மழையால் இந்த வருடமும் அதே நிலையே நீடிக்கிறது. சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தேங்கும் நீரால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in