அணையோர, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருங்க: 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

மழை
மழை

கேரளத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிக்கையில், “கேரளத்தில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 24 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் 7 முதல் 11 செ.மீ கனமழையும், இடி, மின்னலும் ஏற்படும். இது அடுத்த 5 நாள்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது ”எனக் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே 6 முதல் 11 செ.மீவரை மழை பெய்யும் போது மஞ்சள் எச்சரிக்கையும், 6 முதல் 20 செ.மீவரை மழை பெய்யும் போது ஆரஞ்சு எச்சரிக்கையும், 20 செ.மீக்கு மேல் மழை பெய்யும் என எச்சரிக்கப்படும்போது சிவப்பு எச்சரிக்கையும் விடப்படும். இதேபோல் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் 11 மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அணையோர, கரையோர மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in