8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலைத் தொடர்ந்து நாகப்பட்டிணம், காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கனமழைக் குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை நேற்று இரவு முதலே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. சென்னையில் இன்றும் பல பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.”எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in