நவம்பர் 9-க்கு பிறகு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையும்: வானிலை மையம் அலர்ட்

நவம்பர் 9-க்கு பிறகு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையும்: வானிலை மையம் அலர்ட்

வங்கக் கடலில் நவம்பர் 9-ம் தேதி உருவாகும் காற்றழுத்தப் பகுதி வலுவடைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதல் நாளிலிருந்தே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்தது. இதையடுத்து குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 9ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவான பிறகு 48 மணி நேரத்தில் அது வலுவடைந்து, வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கரையை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in