சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை: தென் மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய  மழை: தென் மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் திடீர் திடீரென ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி. ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. லட்சத் தீவு, மாலத் தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதி மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in