20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இருபது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் புரட்டாசி மாதம் வெப்பம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in