2.40 லட்சம் கன அடியாக நீர் வெளியேற்ற வாய்ப்பு: கரையோர மக்களுக்கு சேலம் கலெக்டர் எச்சரிக்கை

2.40 லட்சம் கன அடியாக நீர் வெளியேற்ற வாய்ப்பு: கரையோர மக்களுக்கு சேலம் கலெக்டர் எச்சரிக்கை

காவிரி ஆற்றில் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 2.40 லட்சம் கன அடியாக உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதால் சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக காவிரியில் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 2 லட்சம் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் பெங்களூரு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறையாததால் இன்று இரவு காவிரியில் நீர்வரத்து 2.40 லட்சம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் காவிரியின் கரையோரம் இருக்கும் சேலம் மாவட்டத்து மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம் அறிவுறுத்தியுள்ளார். காவல்துறை, தீயணைப்புத் துறை, வருவாய் துறை ஆகியவர்கள் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என அறிவுறுத்தியுள்ளார்.

மேட்டூருக்கு வரும் மொத்த நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்படுவதால் காவேரி டெல்டா மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறுகளில் 2 லட்சம் கன அடி நீர் பிரித்து விடப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் உள்ள பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. கரூர், நாமக்கல், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கைளுடன் இருக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in