11 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: தப்பியது தமிழகம்

11 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: தப்பியது தமிழகம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பொழியும்; சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருக்கும் நிலையில், இந்திய அளவில் 11 மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வுமையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர் (ஒன்றியப் பிரதேசம்), பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 19 ஆம் தேதிவரை வெப்ப அலை நிலவும். காஷ்மீரீலும், இமாசல பிரதேசத்திலும் இப்போதைய வெப்பநிலை தொடரும். உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் 20-ம் தேதிவரை வெப்ப அலை தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுவையின் சில பகுதிகள், கேரளம் ஆகிய இடங்களில் மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.