வீட்டிற்குள் குவியல், குவியலாக வெடிகுண்டுகள், ஏ.கே 47 துப்பாக்கிகள்… பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி: போலீஸார் ஷாக்!

வீட்டிற்குள் குவியல், குவியலாக வெடிகுண்டுகள், ஏ.கே 47 துப்பாக்கிகள்… பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி: போலீஸார் ஷாக்!

ஜம்முவில் பிடிபட்ட லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதிகள் வீட்டில் குவியல், குவியலாக கையெறி குண்டுகள், ஏகே. 47 வகை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் பாஜக சமூக வலைதளப்பிரிவு நிர்வாகி என்ற தகவல் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவின் ரியாஸி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு சமீபத்தில் இரண்டு இளைஞர்கள் குடி வந்துள்ளனர். இரவு நேரங்களில் மட்டும் அவர்களின் நடமாட்டம் இருந்ததால் அப்பகுதி மக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவர்களின் வீட்டின் பூட்டை உடைத்து பொதுமக்கள் உள்ளே புகுந்தனர். வீட்டில் ஏகே 47 ரக துப்பாக்கிகள்,கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் குவியல், குவியலாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வீடு திரும்பிய அந்த இளைஞர்களையும் பொதுமக்கள் பிடித்தனர். இதன் பின் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்திய விசாரணையில், பிடிபட்ட இருவரும் லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதில் தாலிப் ஹூசேன் ஷா கடந்த மே 9-ம் தேதி பாஜகவின் ஜம்மு - காஷ்மீர் சிறுபான்மையினர் ஐடி மற்றும் சமூக வலைதளப் பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த கைது விவகாரம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பதானியா கூறுகையில், "பாஜகவில் சேர ஆன்லைன் திட்டம் அறிமுகப்படுத்தியதால் யார் யார் கட்சியில் சேருகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்களின் பின்புலம் குறித்தும் விசாரிப்பதும் சாத்தியமற்றது. எனவே, இவ்விவகாரம் குறித்து கட்சியின் மேலிடத்துக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார். பாஜக நிர்வாகி ஒருவரே, தீவிரவாதியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in