பள்ளிக்குள் பட்டா கத்தியுடன் வலம் வந்த தலைமையாசிரியர்: வீடியோவால் சிக்கினார்

பள்ளிக்குள் பட்டா கத்தியுடன் வலம் வந்த தலைமையாசிரியர்: வீடியோவால் சிக்கினார்

பள்ளிக்குள் பட்டா கத்தியுடன் வலம் வந்த தலைமையாசிரியரின் வீடியோ வைரலான நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அசாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் திரிதிமேதா தாஸ் பட்டா கத்தியுடன் வலம் வரும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் வீடியோவில் இருந்தது தலைமையாசிரியர் திரிதிமேதா தாஸ் என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளிகல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணையில், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர்களை மிரட்டும் நோக்கத்திற்காக தலைமையாசிரியர் கத்தியுடன் பள்ளிக்குள் வலம் வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in