
பெண்கள் விடுதியில் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட தலைமையாசிரியரை கட்டையால் மாணவிகள் அடித்து உதைத்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கா நகர் அருகே உள்ள கட்டேரி கிராமத்தில் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு தலைமையாசிரியர் சின்மையா ஆனந்தமூர்த்தி என்பவர் இரவு நேரத்தில் விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மாணவி ஒருவரிடம் அவர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மாணவி தனது தோழிக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து, தோழி, சக மாணவிகளை அழைத்துக் கொண்டு தலைமையாசிரியர் இருந்த அறைக்கு கம்புகளுடன் சென்றுள்ளார். இதனால் தலைமையாசிரியர் செய்வதறியாது விழிபிதுங்கி நின்றார். கடும் கோபத்தில் இருந்த மாணவிகள் தலைமையாசிரியரை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து தலைமையாசிரியர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தகாத முறையில் நடந்து கொண்ட தலைமையாசிரியரை மாணவிகள் கட்டையால் அடித்து உரைத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.