
குமரி மாவட்டத்தில் வீட்டின் முன்னால் குவிந்து கிடந்த காய்ந்த சருகுகளுக்கு தீவைத்த முதியவர் அந்தத் தீயிலேயே கருகி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலை உதிர்காலங்களில் அதிகமாக இலைகள், சருகுகள் விழுவது வழக்கம். அப்படி தன் வீட்டு முன்பு நின்ற செடிகள் மற்றும் மரங்களில் இருந்து விழுந்த சருகுகளை குமரி மாவட்டம், குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகக்கண்(75) என்பவர் மொத்தமாகச் சேர்த்துவைத்து தீவைத்தார். கூலித் தொழிலாளியான ஆறுமுகக்கண் பற்ற வைத்த தீ சருகுகளில் மள, மளவென பற்றி எரிந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகக்கண்ணும் தீயில் சிக்கினார்.
ஆனால் வயதானவர் என்பதால் அவரால் உடனடியாக தப்பித்து ஓடிவர முடியவில்லை. அதிலேயே விழுந்தார். இதில் ஆறுமுகக்கண்ணின் உடலிலும் தீப்பற்றி எரிந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து அவரது மகன் சுப்பிரமணியன் கொடுத்தப் புகாரின் பேரில் இரணியல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகக்கண் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சருகுகளை சேர்த்து பற்றவைத்த தீயில் சிக்கி முதியவர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.