என்னைப் பாலியல் வன்கொடுமை செய்து விட்டார்: கிரிக்கெட் கேப்டன் மீது சிறுமி பரபரப்பு புகார்

என்னைப்  பாலியல் வன்கொடுமை செய்து விட்டார்:  கிரிக்கெட் கேப்டன் மீது சிறுமி பரபரப்பு புகார்

நேபாள கிரிக்கெட் கேப்டன் மீது போலீஸில் சிறுமி பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுழற்பந்து வீச்சாளரான சந்துப் லமிச்சானே நேபாள நாட்டின் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். கடந்த ஆண்டு தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சந்தீப் மீது கவுசாலா பெருநகர காவல் துறையிடம் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளார். அதில்," நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னைச் சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார். என்னை 2 முறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்" என்று அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியின் காவல் துறை உயர் அதிகாரி ரவீந்திர பிரசாத் தனூக் கூறுகையில்," சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியுள்ளோம். இன்று வழக்கு பதிவாகி உள்ளது. விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின்படி, கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2016-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் சந்தீப். 2017-ம் ஆண்டு நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உலக கோப்பை தகுதி போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியிலும் அவர் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in