சமூக வலைதளத்தில் எனது படங்களை ஆபாசமாக பதிவிட்டுள்ளார்: காதல் கணவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

சமூக வலைதளத்தில் எனது படங்களை ஆபாசமாக பதிவிட்டுள்ளார்: காதல் கணவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

சமூக வலைதளத்தில் தனது படத்தை ஆபாசமாக பதிவிட்ட காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மனைவி போலீஸில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி காவல் சரகத்திற்குட்பட்ட 20 வயது பெண், போலீஸில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நானும், எங்கள் பகுதியைச் சேர்ந்த 30 வயது வாலிபரும் காதலித்தோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம்.
அதன்பிறகு எங்களது வீட்டில் என்னையும், என்னுடைய கணவரையும் ஏற்றுக்கொண்டனர். தற்போது என்னுடைய அக்கா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
என்னுடைய கணவரின் நடத்தையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நான் மற்றும் என்னுடைய தாயார், அக்கா ஆகியோரது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்டுள்ளார். இதைக்கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். எனவே, எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த மனைவியே கணவர் மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in