இதுபோன்ற வேகப்பந்து வீச்சாளரைப் பார்த்ததில்லை: உம்ரான் மாலிக்கை பாராட்டும் அஜய் ஜடேஜா!


இதுபோன்ற வேகப்பந்து வீச்சாளரைப் பார்த்ததில்லை: உம்ரான் மாலிக்கை பாராட்டும் அஜய் ஜடேஜா!

இந்திய அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை, முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். 23 வயதான உம்ரான் மாலிக்கை போன்ற ஒரு வேகப்பந்து வீச்சாளரை சமீபத்திய ஆண்டுகளில் பார்த்ததில்லை என்று அவர் கூறினார்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம், இந்திய அணி புத்தாண்டை உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்த இளம் அணியில் சூர்யகுமார் யாதவ், அக்ஸர் படேல், சிவம் மாவி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

இந்த மூன்று பெயர்களைத் தவிர, வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கைக்கு எதிரான இந்த தொடரின் போது அவர் வீசிய 11 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம் காட்டினார். அதுமட்டுமல்லாமல், இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியின் போது அவரின் பந்துவீச்சு மணிக்கு 155 கிமீ வேகத்தை எட்டியது. இது ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் இன்றுவரை தொட்ட அதிகபட்ச வேகமாகும். இதற்காக எல்லா மூலைகளிலிருந்தும் மாலிக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இது தொடர்பாகப் பேசிய முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா, இந்திய ஜாம்பவான் ஜவகல் ஸ்ரீநாத்துடன் உம்ரான் மாலிக்கை ஒப்பிட்டு பாராட்டியுள்ளார். அவர், "இந்த நேரத்தில் உம்ரான் மாலிக் பந்துவீசும் விதத்தைப் போலவும், ஓடிக்கொண்டிருக்கும் விதத்தைப் போலவும், நான் நீண்ட நாட்களாகப் இந்தியாவில் ஒரு பந்து வீச்சாளரிடம் பார்த்தது இல்லை. எனக்கு கடைசியாக ஞாபகம் வருவது ஸ்ரீநாத் தான்.

உம்ரான் மாலிக்கிடம் ஏதோ சிறப்பு உள்ளது. எனவே அவரைப் போலவே அவரை பயன்படுத்த முயற்சிக்கவும். நெருக்கடியான சமயத்தில் வாய்ப்புக் கிடைத்தால் 10 ல் 8 முறை அவர் மூன்று விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை முடிப்பார்”என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in