21 ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கிறீர்களா?- மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

21 ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கிறீர்களா?- மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

2001-02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் இறுதியாண்டு முடிக்கும் மாணவர்கள் பலர் அரியர் வைத்துவிடுகின்றனர். இதன் பின்னர் அவர்களை வேலை தேடும் படலத்தை தாெடர்கின்றனர். இதனால் அவர்கள் டிகிரி வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது தமிழக அரசு.

அதன்படி, 2001-02 கல்வியாண்டு முதல், பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், 2001-02-ம் கல்வியாண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3-வது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால், நடைபெறவுள்ள செம்ஸ்டர் தேர்வில் தேர்வெழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் தேர்வுக்கட்டணத்துடன் 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் இணையதளத்தில் டிசம்பர் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in