கலெக்டர் பங்களாவில் இருந்து பிள்ளையார் சிலை அகற்றம்?- கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்

ஆட்சியர் பங்களாவில் இருந்த பிள்ளையார் சிலை
ஆட்சியர் பங்களாவில் இருந்த பிள்ளையார் சிலை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் உத்தரவால் ஆட்சியர் இல்லத்தில் இருந்த பிள்ளையார் சிலை  அகற்றப்பட்டதாக சொல்லப்படும் விவகாரம் இந்து அமைப்பினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பங்களாவின் நுழைவாயிலில் விநாயகர் சிலை ஒன்று நீண்ட காலமாக அமைந்திருக்கிறது. சுமார் 60 ஆண்டு காலமாக அது அங்கே இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்தனை வருட கால கட்டத்தில் அங்கே இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவர்  என்று எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் ஆட்சியர்களாக  வந்திருந்தாலும் அந்த பிள்ளையார் சிலையை எதுவும் செய்ததில்லை. மாறாக நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் வழிபட்டு வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு  மாற்றப்பட்டு தற்போது மெர்சி ரம்யா புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவர் இதுவரை ஆட்சியர் பங்களாவில் குடியேறவில்லை. பங்களாவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அங்கு வாயிலில் இருந்த பிள்ளையார் சிலையை அகற்ற வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும்,   அதன் விளைவாக நேற்று பிள்ளையார் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி மெல்ல வெளியே கசிய ஆரம்பித்ததும் இதற்கு இந்து அமைப்புகள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கலெக்டர் பங்களா என்பது அவரது சொந்த வீடு கிடையாது.  தொன்மை வாய்ந்த கட்டிடத்தில் எதையும் மாற்றவோ, நீக்கவோ கலெக்டருக்கு அதிகாரம் கிடையாது.  இருந்தும் இவ்வாறு சாமி சிலையை அடியோடு அகற்றியது ஆட்சியர் மெர்ஸி ரம்யாவின் ஆழமான மத உணர்வை காட்டுகிறது என்று கொந்தளிக்கும் இந்து அமைப்பினர், இதற்கு தங்களது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆட்சியர் பங்களாவைச் சேர்ந்தவர்களோ பங்களாவில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு இருப்பதால் அதற்கு தோதாக பிள்ளையார் சிலை வேறு இடத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in