போதைமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை - 120 பெண்களின் ஆபாச வீடியோ: சாமியார் ஜலேபி பாபாவுக்கு 14 ஆண்டுகள் சிறை

போதைமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை - 120 பெண்களின் ஆபாச வீடியோ: சாமியார் ஜலேபி பாபாவுக்கு 14 ஆண்டுகள் சிறை

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோக்களாக எடுத்த சாமியார் ஜலேபி பாபாவுக்கு ஹரியானாவின் பதேஹாபாத் விரைவு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

ஹரியானாவில் ஜலேபி பாபா என்று அழைக்கப்படும் அமர்புரி என்பவர், தன்னிடம் உதவி கேட்டு வரும் பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றை வெளியிடுவேன் என மிரட்டி பாதிக்கப்பட்டப் பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டியும் வந்தார்.

தோஹானாவில் உள்ள பாபா பாலக் நாத் மந்திரில் சாமியாராக இருந்த அமர்புரி, இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மேலும், அவரது மொபைல் போனில் இருந்து 120 பாலியல் வீடியோ கிளிப்களும் மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜலேபி பாபா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 292, 293, 294, 376, 384, 509 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67-A ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக பதேஹாபாத் நீதிமன்றம் ஜனவரி 5 அன்று ஜலேபி பாபா அமர்புரியை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. நீதிபதியால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து ஜலேபி பாபா நீதிமன்ற அறையில் கண்ணீர் விட்டு அழுதார்.

தீர்ப்பினை வாசித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பல்வந்த் சிங், அமர்புரிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67-ஏ பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். பாதிக்கப்பட்ட பல பெண்களில், ஆறு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பளித்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in