இந்தாங்க, நீங்க ஒரு டாக்டர் பட்டம் வைச்சுக்குங்கோ: அள்ளித்தந்த 'வள்ளலை' போலீஸ் தேடுகிறது

வடிவேலுவுடன் ஹரிஷ்
வடிவேலுவுடன் ஹரிஷ் இந்தாங்க, நீங்க ஒரு டாக்டர் பட்டம் வைச்சுக்குங்கோ: அள்ளித்தந்த 'வள்ளலை' போலீஸ் தேடுகிறது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து சினிமா பிரமுகர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு போலி கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கிய  ஹரிஷ் தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வைத்து கடந்த பிப் 26 ம் தேதி சினிமா பிரமுகர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு  கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது. 

இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், கஜராஜ், நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ், நடிகர் வடிவேலு, யூடியூப்பில் பிரபலமான கோபி , சுதாகர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.  இந்நிலையில் இந்த டாக்டர் பட்டத்திற்கும், அண்ணா பல்கலைக் கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து  இது  தொடர்பாக காவல் துறையில் புகாரளிக்கப் பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த அமைப்பின் இயக்குநர் ஹரிஷ்  தலைமறைவாகிவிட்டார். அவரது தொலைபேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in