`சிறையில் என்னை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்கிறார்கள்'- மனைவிக்கு ஹரி நாடார் 64 பக்க கடிதம்!

`சிறையில் என்னை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்கிறார்கள்'- மனைவிக்கு ஹரி நாடார் 64 பக்க கடிதம்!

மோசடி வழக்கில் பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடார், சிறைத்துறையினர் தன்னை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாக மனைவிக்கு 64 பக்க கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

கிலோ கணக்கில் நகை அணிந்து நடமாடும் நகைக்கடையாகத் தமிழகத்தில் வலம் வந்தவர் ஹரி நாடார். பனங்காட்டுப்படை என்ற கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருந்த இவரை, அக்கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா கட்சியிலிருந்து நீக்கி இருந்தார். மேலும் இவர் சினிமா பைனான்சியராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் தனக்கு வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஹரி நாடார் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பெயரில் கடந்த 2021 மே மாதம் கேரளாவில் உள்ள கோவளத்தில் பெங்களூரு போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகப் பெங்களூரு அழைத்துவரப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூரு அக்ரஹார சிறையில் இருக்கும் ஹரி நாடார், தன்னை சிறைத்துறையினர் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாக மனைவிக்கு 64 பக்க கடிதம் ஒன்றை எழுதியிருப்பது பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்து வைத்துள்ள தன்னை கொடும் குற்றவாளி போல சிறைத்துறையினர் சித்ரவதை செய்து வருகின்றனர். தனக்கு ஜாமீன் வழங்காமல் சிறையில் வைத்து ஆடைகளை அகற்றச் சொல்லி கேலி செய்து சித்ரவதை செய்துவருகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in