ரேட் கேட்டு இளம்பெண்ணுக்கு தொலைபேசியில் ஆண்கள் தொல்லை: மாஸ்டர் ஃபிளான் போட்ட மற்றொரு பெண் கைது

ரேட் கேட்டு இளம்பெண்ணுக்கு தொலைபேசியில் ஆண்கள் தொல்லை: மாஸ்டர்  ஃபிளான் போட்ட மற்றொரு பெண் கைது

தன்னைக் காதலிக்க மறுத்த வாலிபரின் சகோதரி படத்தை இணையத்தில் ஆபாசமாக பரப்பியதுடன் அவரது செல்போன் எண்ணைப் பகிர்ந்த இளம்பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு வடகிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு சில நாட்களாக தொலைபேசியில் ஆண்கள் ஆபாசமாக பேசியுள்ளனர். அத்துடன் அவரை பாலியல் தொழிலுக்கும் அழைத்துள்ளனர். வேறு வேறு எண்களில் இருந்து இப்படி அழைப்பு வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இதுகுறித்து வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சியான பல தகவல்கள் வெளியானது. புகார் செய்த இளம்பெண் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு அதில் அவரது புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவரை பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் போல சித்தரித்து, அவரது செல்போன் எண்ணும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இளம்பெண் பெயரில் இன்ஸ்டாகிராமில் இப்படி போலி கணக்கு தொடங்கியவர்களைப் பிடிக்க போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணுக்கு தெரிந்த மற்றொரு பெண் தான் இந்த செயலின் பின்னணியில் இருந்ததை அறிந்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

அவரைப் பிடித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். இளம்பெண்ணின் சகோதரரை அந்த பெண் காதலித்துள்ளார். ஆனால், அவரை வாலிபர் காதலிக்க மறுத்துள்ளார். அதனால் அவரை பழிவாங்க அவரது சகோதரி படத்தை ஆபாசமாக இன்ஸ்டாகிராமில் சித்தரித்ததுடன், அவரது செல்போன் எண்ணையும் அதில் அவர் பதிவு செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அந்த இளம்பெண்ணைக் கைது செய்த போலீஸார், இந்த குற்றப்பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in