கோவையில் ஆடல், பாடலுடன் 'ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி: ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு

கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி
கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சிகோவையில் ஆடல், பாடலுடன் 'ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி: ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு

கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மகிழ்ச்சியின் வெளிப்பாடு
மகிழ்ச்சியின் வெளிப்பாடுகோவையில் ஆடல், பாடலுடன் 'ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி: ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு

கோவை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆடல், பாடல், விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அதுமட்டுமின்றி உடற்பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது. 

மேலும் வாரந்தோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், கோவை மாநகரப் பகுதிகளில் வசிக்கும் பல்வேறு மக்கள் கலந்து கொள்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு ஆடல், பாடல் என உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இதில் பல்வேறு பொதுமக்கள் அவர்களது தனித்திறமைகளையும் வெளிபடுத்தி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக  சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் இந்த வாரம் ’ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு ஆடல், பாடல்கள் என உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும் பல்வேறு பொதுமக்கள் அவர்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

இம்முறை கூடுதலாக பல்வேறு விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. அதன்படி மக்களே விளையாடும் பெரிய அளவிலான பரமபத விளையாட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் ஆகிய விளையாட்டுகள் இடம் பெற்றிருந்தன.வாரம் 6 நாட்கள் தொடர்ந்து பணிபுரியும் தங்களுக்கு வாரம் ஒரு முறை இது போன்று நிகழ்ச்சி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இதில் கலந்து கொள்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்தவார நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு விளையாடியது அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  இது போன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளையாடுவது தங்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிப்பதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in