மாற்றுத்திறனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்: பெட்ரோல் ஸ்கூட்டருக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

அரசு உத்தரவு
அரசு உத்தரவுமாற்றுத்திறனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்: பெட்ரோல் ஸ்கூட்டருக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கான நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இரு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை விரிவுப்படுத்தி ஒரு கால் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் 2023-2024-ம் நிதியாண்டு முதல் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் கூடுதலாக நிதி ரூ.450.00 இலட்சம் ஒப்பளிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

இருகால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் 2011-2012-ம் நிதியாண்டு முதல் துவக்கப்பட்டு, நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.

கடந்த 2018-2019-ம் நிதியாண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சுமார் 52 நலத் திட்டங்கள் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்குள் செயல்படுத்திட மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு அதிகாரப் பகிர்வு (Delegation of Power) வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், 2023-2024-ம் நிதியாண்டிற்கான சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் 17.04.2023 அன்று நடைபெற்ற இத்துறையின் மானிய கோரிக்கையின் போது முதலமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in