தகாத உறவால் துண்டிக்கப்பட்ட தலை... 51 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை: திமுக பிரமுகரின் உடல் மகனிடம் ஒப்படைப்பு

தகாத உறவால் துண்டிக்கப்பட்ட தலை... 51 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை: திமுக பிரமுகரின் உடல் மகனிடம் ஒப்படைப்பு

திமுக பிரமுகரை துண்டாக வெட்டி கொலை செய்த வழக்கில் 51 நாட்கள் தேடியும் தலையை கிடைக்காததால் உடலை உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

சென்னை மணலியை சேர்ந்த திமுக பிரமுகர் சக்கரபாணி (65) கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் மணலி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் காவல்துறையினர், சக்கரபாணியின் செல்போன் எண்ணை ஆய்வு போது ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முகவரியை காட்டியது. உடனே காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது சக்கரபாணியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

கள்ளகாதலி தமீம் பானு
கள்ளகாதலி தமீம் பானு

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறில் கள்ளகாதலி தமீம் பானு, அவரது சகோதரர் வாஷிம்பாஷா கூட்டாக சேர்ந்து திமுக பிரமுகர் சக்கரபாணியை துண்டாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக ஆட்டோ ஓட்டுநர் டில்லி பாபு உட்பட 3 பேரையும் ராயபுரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சக்கரபாணியின் தலையை துண்டித்து அடையாறு ஆற்றில் வீசியதாக வாஷிம் பாஷா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அடையாறு ஆற்றில் வீசப்பட்ட தலையை தீவிரமாக தேடிவந்தனர்.

கடந்த 51 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு, ஸ்கூபா வீரர்கள் ராட்சத கொக்கி மூலமாக தீவிரமாக தேடியும் இதுவரை தலை கிடைக்கவில்லை. இதையடுத்து, டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டு திமுக பிரமுகரின் உடலை நேற்று அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in