சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்: அசர வைத்த மாற்றுத்திறனாளி மாணவிகள் (வீடியோ)

சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்: அசர வைத்த மாற்றுத்திறனாளி மாணவிகள் (வீடியோ)

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளை கவுரவப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ``தமிழகத்தில் 4,39,315 மாற்றுத் திறனாளிகள் தற்போது 1,000 ரூபாய் ஓய்வூதியம் பெற்றுவருகிறார்கள். வரும் ஜனவரி முதல் அவர்களுக்கு 1,500 ரூபாயாக ஓய்வூதியம் உயர்த்திக் கொடுக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார்.

இதனிடையே, உலக மாற்றுத்திறனாளி தினமான இன்று தாய்த்தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in