மாற்றுத்திறனாளியின் மனைவிடம் சில்மிஷம்... வேடிக்கை பார்த்த காவலர்: மதுரை ரயில் நிலையத்தில் அவலம்

சில்மிஷத்தில் ஈடுபட்ட வரை தாக்கிய மாற்றுத்திறனாளி கணவர்
சில்மிஷத்தில் ஈடுபட்ட வரை தாக்கிய மாற்றுத்திறனாளி கணவர்

மதுரை ரயில் நிலையத்தில் தனது மனைவியுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை மாற்றுத்திறனாளி கணவர் ஊன்று கோலால் அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மதுரையில் இருந்து வெளியூர் செல்வதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு தனது குடும்பத்தினருடன் மதுரை ரயில் நிலையத்தில் காத்திருந்தார். சற்று அசதியாக இருந்த காரணத்தால் தனது குடும்பத்தினருடன் ரயில் நிலைய நுழைவு வாயில் உறங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், அதிகாலையில் மாற்றுத்திறனாளி கணவர் எழுந்து பார்த்த போது, அவரது மனைவியிடம் அருகில் இருந்த ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தார். இதனை கவனித்த கணவர் தனது கையில் இருந்த ஊன்று கோலால் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை தாக்கினார். இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

காணொளியில் இருந்த நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் இல்லை. மேலும், இச்சம்பவம் நடைபெற்ற போது அருகில் நின்றுகொண்டிருந்த காவலர் ஒருவர் அதனை வேடிக்கைப் பார்த்து வந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது .

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in