நாளை முதல் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்!

நாளை முதல் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்!

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்டை நாளை முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

2022 -2023-ம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் 17-ம் தேதி நடக்கிறது. தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வை நடக்கிறது. இந்தியா முழுவதிலும் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த முறை கடந்த ஆண்டைவிட 20 நிமிடங்கள் கூடுதலாக இந்தத் தேர்வுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குத் தொடங்கி, மாலை 5.20-க்குத் தேர்வு முடிகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 200 வினாக்களுக்கு 180 வினாக்கள் மட்டுமே விடையளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் நாளை முதல் http://neet.nta.nic.in என்ற இணையத்தில் இருந்து ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in