குடியிருப்புக்கு மத்தியில் அரை நிர்வாண குளியல்; காரியம் செய்பவர்கள் அட்டகாசம்: முதல்வரின் தனிப்பிரிவுக்கு சென்ற புகார்

குடியிருப்புக்கு மத்தியில் காரியம் செய்கிறார்கள்
குடியிருப்புக்கு மத்தியில் காரியம் செய்கிறார்கள்

இறந்தவர்களுக்கு காரியம் செய்கிறோம் என்கிற பெயரில் குடியிருப்புக்கு மத்தியில் அரை நிர்வாணமாக குளித்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காரிய மேடையை அகற்றக்கோரியும் முதல்வரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் முன்பு போடப்பட்டு சென்ற காரியம் செய்த பொருட்கள்
வீட்டின் முன்பு போடப்பட்டு சென்ற காரியம் செய்த பொருட்கள்

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேட்டில் உள்ள பிரகாஷ் நகரில் இறந்தவர்களுக்கு காரியம் செய்யும் காரியம் மேடை சில ஆண்டுகளாக இருக்கிறது. அதன் அருகில் குளம் இருப்பதால் அங்கு காரியமேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருபவர்கள் காரியம் செய்துவிட்டு குளத்தில் குளிப்பதோடு அவர்களின் உடமைகள் மற்றும் குப்பைகளை அங்கே போட்டு விட்டு வந்தனர். இதனால் குளம் சீரமைக்கப்பட்டு சுற்றி பூங்கா அமைக்கப்பட்டுள்ளதோடு, மதில் சுவர் எழுப்பப்பட்டு பூட்டப்பட்டு விட்டது. இதனால் இங்கு காரியம் செய்ய வருபவர்கள் குடியிருப்புக்கு மத்தியில், அதாவது சாலையில் நின்றபடி அரை நிர்வாணமாக குளித்து வருவதாேடு, வாகனங்களில் வருபவர்கள் அங்கேயே நிறுத்திவிட்டு இடையூறு செய்து வருகிறார்கள்.

வீட்டின் முன்பு போடப்பட்டு சென்ற காரியம் செய்த பொருட்கள்
வீட்டின் முன்பு போடப்பட்டு சென்ற காரியம் செய்த பொருட்கள்

இது குறித்து அங்குள்ள மக்கள் தட்டி கேட்டுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் தகாத வார்த்தைகள் பேசுவதோடு தாக்குதலும் நடத்தி வருகின்றனர். மேலும், காரியம் செய்ய வருபவர்கள் அங்கேயே ஆடைகளை கழற்றிவிட்டு போட்டு செல்வதால் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கணவனை இழந்த பெண்களை அழைத்து வந்து நடுரோட்டில் அமர வைத்தும் சடங்கு செய்கிறார்கள். இதனால் அங்கு வசிக்கும் பெண்கள் அவசர தேவைக்கு கூட வெளியில் வர இயலாது நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் காரியத்துக்கு வருபவர்கள் மண்பானைகள், தென்னை ஓலைகள், வாழை இலைகள், கைம்பெண்களின் புடவைகள், உடைந்த வளையல்கள், பாய் என பொருள்களை தெருவிலேயே போட்டுவிட்டு செல்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களை பாதிக்கின்ற காரியமேடையை அங்கிருந்து அகற்றி நடவடிக்கை எடுக்கும்படி முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, காரிய மேடை அமைக்க இடம் கிடைக்கவில்லை என்றும் விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகின்றனர்.

வீட்டின் முன்பு கிடக்கும் தலைமுடி, காரியம் செய்த பொருட்கள்
வீட்டின் முன்பு கிடக்கும் தலைமுடி, காரியம் செய்த பொருட்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in