சலூன் கடையில் வெடித்தது ஹேர் டிரையர்: வாடிக்கையாளர் தலையில் பற்றி எரிந்த தீ

சலூன் கடையில் வெடித்தது ஹேர் டிரையர்:  வாடிக்கையாளர் தலையில் பற்றி எரிந்த தீ

வங்கதேசம் காஞ்ச்பூரில் முடிதிருத்தகத்தில் ஹேர் டிரையர் வெடித்து தீப்பிடித்தது. அத்துடன் வாடிக்கையாளர் தலையில் தீப்பிடித்து எரிந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கதேசம், காஞ்ச்பூரின் நாராயண்கஞ்ச் பகுதியில் முடி திருத்தகம் உள்ளது. இந்து கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் ஹேர்டிரையர் போட வந்தார்.

அதற்காக கடை ஊழியர், ஹேர் டிரையரை ஸ்விட்ச் போர்டில் மாட்டியுள்ளார். அதை ஆன் செய்தவுடன் பயங்கர சத்தத்துடன் ஹேர் டிரையர் வெடித்தது. இதனால் ஹேர் டிரையர் போட வந்த வாடிக்கையாளர் தலையில் தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது. அந்த தீ நாற்காலி மற்றும் கடையின் பிற பகுதியிலும் பரவியது. இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in