இன்ஃப்ளுயன்சா வைரஸ் காய்ச்சலால் இவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்: எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்

இன்ஃப்ளுயன்சா  ஹெச்3என்2  வைரஸ்  காய்ச்சல்
இன்ஃப்ளுயன்சா ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சல் இன்ஃப்ளுயன்சா வைரஸ் காய்ச்சலால் இவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்: எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்

இந்தியாவில் வேகமாக பரவும் இன்ஃப்ளுயன்சா ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், யார், யாரையெல்லாம் அதிகம் இந்த வைரஸ் தாக்கும் என்று இந்திய ஆராய்ச்சி மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இன்ஃப்ளுயன்சா எச்3என்2 வைரஸ் (Influenza H3N2) பாதிப்பு அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என்பது வைரஸ் காய்ச்சல். அதாவது, பரவக் கூடிய வைரஸ் காய்ச்சல். லேசான சளி, லேசான தொண்டை வலி, லேசான இருமல் என்று இதன் பாதிப்புகள் இருக்கலாம். சில நேரங்களில் பாதிப்பு தெரியாமல் கூட இருக்கலாம்.

லேசான காய்ச்சலாகத் தொடங்கி தீவிர காய்ச்சலாக பாதிப்பை ஏற்படுத்தலாம். தற்போது இன்ஃப்ளுயன்சா எச்3என்2 ( Influenza A subtype H3N2 ) என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஹெச்3என்2 வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். உடல் நலம் குன்றியோர், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிரத்துடன் கூடிய ஹெச்3என்2 வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச் சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை கூறியுள்ளது. அத்துடன் மாவட்டங்களில் அதிக காய்ச்சல் பாதிப்பு இருக்கும் இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்த அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in