பண்டல், பண்டலாக கிட்டங்கியில் பதுக்கப்பட்ட குட்கா: இருவரை சுற்றி வளைத்த தனிப்படை போலீஸார்

பண்டல், பண்டலாக கிட்டங்கியில் பதுக்கப்பட்ட குட்கா:  இருவரை சுற்றி வளைத்த தனிப்படை போலீஸார்

திண்டுக்கல் அருகே கிட்டங்கியில் பதுக்கிய 187 கிலோ குட்கா பண்டல்களை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆன்லைன் லாட்டரி , தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, இச்செயல்பாடுகளை கண்காணிக்க காவல் துறையில் பல்வேறு தனிப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தனிப்பிரிவு உருவாக்கிய, தனது கவனத்திற்கு வரும் பல்வேறு சட்டவிரோத, சமூக விரோத செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கத்தில் உள்ள ஐ.ஜி அஸ்ரா கார்க்கிற்கு தகவல் கிடைத்தது. அவரது அறிவுறுத்தல் படி தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி தலைமையில் போலீஸார், சாணார்பட்டி வட்டாரத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிலுவத்தூர் பகுதியில் சென்றபோது அங்குள்ள ஒரு கிட்டங்கியைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 187 கிலோ குட்கா பண்டல்களை கைப்பற்றினர். இது தொடர்பாக தாமஸ், சவுந்தரம் ஆகியோரை பிடித்து சாணார்பட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், 3 செல்போன்களை பறிமுதல் செய்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in