
சென்னையில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற சிறப்பு வாகன சோதனையில் தடைச் செய்யப்பட்ட 883.6 கிலோ குட்கா, 899.8 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த சென்னை பெரு நகர காவல்துறை பல முற்யசிகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனையினை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 7 நாட்களாக சென்னை முழுவதும் சிறப்பு வாகன சோதனையில் போலீசார் ஈடுப்பட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 883.6 கிலோ குட்கா, 899.8கிலோ மாவா அது தயாரிக்க தேவையான மூலப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 42 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 4 இரு சக்கர வாகனம், 2 இலகுரக வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.