
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோன் இன்று அதிகாலையில் எல்லைப்பாதுகாப்பு படையினரால்(பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த ட்ரோனில் இருந்த 3 கிலோ ஹெராயின், சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் செக்டாரில் இன்று அதிகாலை எல்லைப்பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஒரு ட்ரோன் ஊடுருவ முயற்சி செய்தது. அந்த ட்ரோனை எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனை அவர்கள் தேடினர். அப்போது அதில் 3 கிலோ ஹெராயின், சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், ஒரு பத்திரிகை இருந்தது. அவற்றை மீட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர், உத்தர் எல்லைப்பபுறக்காவல் நிலயைத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்திய எல்லைக்குள் ட்ரோன் ஊடுருவ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.