'குஜராத் எங்கள் ஆய்வகம், விஜய் ரூபானியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது இதற்காகத்தான்' - ஜே.பி.நட்டா பதில்

 'குஜராத் எங்கள் ஆய்வகம், விஜய் ரூபானியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது இதற்காகத்தான்' - ஜே.பி.நட்டா பதில்

கடந்த ஆண்டு குஜராத் முதல்வர் பதவியிலிருந்து விஜய் ரூபானியை நீக்கிவிட்டு பூபேந்திர படேலைக் கொண்டு வந்தது ஏன் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா விளக்கமளித்துள்ளார்.

அஜெண்டா ஆஜ்தாக்கில் பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானியை நீக்கியதும், அமைச்சரவையை மாற்றியதும் பரிசோதனையின் ஒரு பகுதியாகும் என்று கூறினார். அவர், "கடந்த 27 ஆண்டுகளாக நாங்கள் குஜராத்தில் ஆட்சியில் இருக்கிறோம், குஜராத் எங்கள் ஆய்வுக்கூடம் என்று முன்பே நாங்கள் கூறியிருந்தோம். எனவே அனைத்து அமைச்சர்களையும் ஒன்றாக மாற்ற முடிவு செய்தோம்.

இங்கு யாருக்கும் எந்த பதவியும் நிரந்தரம் இல்லை, எந்த நாற்காலியிலும் ஒருவர் ஒட்டிக் கொள்ளக் கூடாது என்ற கலாச்சாரத்தை இது ஊக்குவிக்கிறது. ஒருவர் கட்சிக்காக உழைக்க வேண்டும், அவர் எங்கு செல்ல வேண்டும் என்பதை கட்சிதான் தீர்மானிக்கிறது. இதனால் விஜய் ருபானி நன்றாக வேலை செய்யவில்லை என்று இல்லை. ஆனால் மாநிலத்தில் எங்கள் வேர்கள் வலுவாக இருந்ததால், நாங்கள் பரிசோதனையை தொடர முடிவு செய்தோம். நாங்கள் ஒருவரை பிரதிநிதித்துவம் செய்கிறோம், நாங்கள் வழிகாட்டுகிறோம், ஆனால் பொறுப்பு வழங்கப்பட்டதும், அதற்கேற்ப செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. நேற்று வெளியான முடிவுகளின்படி, மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் 156 இடங்களை அது கைப்பற்றியது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், 2வது முறையாக மாநில முதல்வராக டிசம்பர் 12-ம் தேதி பதவியேற்க உள்ளார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in