சிறுமியை 34 முறை கத்தியால் குத்திய கொடூரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்புசிறுமியை 34 முறை கத்தியால் குத்திய கொடூரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை

சிறுமியை 34 முறை கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு குஜராத் மாநில ராஜ்கோட் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த கொடூர சம்பவத்தை "அரிதான வழக்கு" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜெட்பூர் தாலுகாவில் உள்ள ஜெதல்சர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த ஜெயேஷ் சர்வையா நீண்ட நாள்களாக பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மார்ச் 16, 2021 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார், சிறுமி அதற்கு மறுத்துவிட்டார்.

இதனால் சிறுமியின் மீது கோபமடைந்த அவர் சிறுமியை 34 முறை கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதுடன், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கூட்டு மனசாட்சியை மீறியதால், நிர்பயா வழக்கை உச்ச நீதிமன்றம் "அரிதான வழக்கு" என்று வரையறை செய்தது.

அதேபோல இந்த வழக்கிலும், "நீதிமன்றம் ஐபிசியின் 302 பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்துள்ளது. இது ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கிய கொலை, எனவே இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது" என்று இந்த வழக்கு குறித்து சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜனக் படேல் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in