குடோன் சுவர் இடிந்து 5 பேர் பலி… 2 பேர் கவலைக்கிடம்: கட்டுமானப்பணியின் போது விபரீதம்

குடோன் சுவர் இடிந்து 5 பேர் பலி… 2 பேர் கவலைக்கிடம்: கட்டுமானப்பணியின் போது விபரீதம்

டெல்லியில் குடோனில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 9 பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

டெல்லியின் அலிபூர் பகுதியில் இன்று கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. அப்போது திடீரென குடோனில் சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி மீட்டுப்பணியில் ஈடுபட்டனர். சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 9 பேர் டெல்லி ராஜா ஹரிஷ் சந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in