கர்ப்பிணியைக் கொடூரமாக தாக்கிய காவலாளி: வைரலான அதிர்ச்சி வீடியோ

கர்ப்பிணியைக் கொடூரமாக தாக்கிய காவலாளி: வைரலான அதிர்ச்சி வீடியோ

அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி சரமாரியாகத் தாக்கி கால்களால் மிதித்ததால் கர்ப்பிணி ஒருவர் மயக்கமடையும் அதிர்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள குலிஸ்தான் ஜவஹர் பிளாக்கில் நோமன் கிராண்ட் சிட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பணிப்பெண்ணாக பணிபுரிந்த சனா என்ற பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த கர்ப்பிணியான சனாவை பாதுகாப்பு காவலர்கள் அப்துல் நசீர், அடில் கான் மற்றும் மஹ்மூத் கலீல் தடுத்து நிறுத்தி உள்ளனர். அத்துடன் உள்ளே விட முடியாது என்று கூறியுள்ளனர். அவர் உணவு வாங்க வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் கர்ப்பிணியாக இருந்ததால் நிற்க முடியாமல் அமர்ந்தார். அப்போது அந்த பெண்ணின் முகத்தில் காவலாளி ஒருவர் சரமாரியாக தாக்கியதுடன் கால்களால் மிதித்தார். இதில் சனா மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், " இந்த சம்பவம் ஆக.5-ம் தேதி நடந்தது என்பது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அவரைத் தாக்கிய காவலாளி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று கூறினர். கர்ப்பிணி பெண்ணை காவலாளி தாக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தியும் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in