அடேங்கப்பா இவ்வளவா? அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் 1.72 லட்சம் கோடி!

அடேங்கப்பா இவ்வளவா? அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் 1.72 லட்சம் கோடி!

நேற்றுடன் முடிவடைந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,72,003 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 1,72,003 கோடி ரூபாயாக உள்ளது. இதில்,சிஜிஎஸ்டி மூலம் ரூ.30,062 கோடியும், எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.38,171 கோடியும் கிடைத்துள்ளது. ஐஜிஎஸ்டி மூலம் ரூ.91,315 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.42,127 கோடியும் சேர்த்து) செஸ் வரி மூலம் ரூ.12,456 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,294 கோடியும் சேர்த்து)  கிடைத்துள்ளது. 

கடந்த 2022 அக்டோபர் மாதம் வசூலான தொகையைவிட 13 சதவீதம் கூடுதலாக இந்தாண்டு அக்டோபர் மாதம் கிடைத்துள்ளது.  2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும். நடப்பு நிதியாண்டில் சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் சராசரியைவிட 11 சதவீதம் அதிகமாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!

தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!

திடீர் பரபரப்பு.. ரத்த சிவப்பாய் மாறிய கடல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in