டிரெண்டான ஹேஸ்டேக்: குரூப் 4 தேர்வு முடிவு தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வு
குரூப் 4 தேர்வுடிரெண்டான ஹேஸ்டேக்: குரூப் 4 தேர்வு முடிவு தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 (GROUP-IV) தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 9,870 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 18,36,535 எழுதி இருந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று ட்விட்டரில் ’#WeWantGroup4Results’ என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது.

இந்தநிலையில், ’’கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப் -4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் துரிய கதியில் நடைபெற்று வருகிறது’’ என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. குரூப் -4 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆன நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்
டிஎன்பிஎஸ்சி விளக்கம்குரூப் 4 தேர்வு முடிவுகள்; இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in