குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று: 92 பணியிடங்களுக்கு 3.2 லட்சம் பேர் போட்டி!

குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று: 92 பணியிடங்களுக்கு 3.2 லட்சம் பேர் போட்டி!

துணை ஆட்சியர், டிஎஸ்பி பதவிக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. 92 பணியிடங்களுக்கு 3.2 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

தமிழகத்தில் குரூப்-1 பதவியில் காலியாக உள்ள வணிகவரி உதவி இயக்குநர், துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் எழுதுகின்றனர். சென்னையில் 144 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 45 ஆயிரத்து 939 பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் 200 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். தேர்வு முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க இந்த நடவடிக்கையை டிஎன்பிஎஸ்சி எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே குரூப் 1 தேர்வு நடைபெறுவதால் முதுநிலைபட்டப் படிப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகளை சென்னை பல்கலைக்கழகம் தள்ளிவைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in