இந்த பத்திரத்தில் கையெழுத்தைப் போடுங்க; மணமகளிடம் வலியுறுத்திய மணமகனின் நண்பர்கள் : அப்படி என்ன எழுதியிருந்தது?

இந்த பத்திரத்தில் கையெழுத்தைப் போடுங்க; மணமகளிடம் வலியுறுத்திய மணமகனின் நண்பர்கள் : அப்படி என்ன எழுதியிருந்தது?

கிரிக்கெட் விளையாட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மணமகனை அனுப்ப வேண்டும் என்று மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து பெற்ற சம்பவம் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். கிரிக்கெட் வீரரான இவர் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் என்ற அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஹரிபிரசாத்துக்கும், தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திருமணத்தின் போது பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள், மணப்பெண்ணை சந்தித்து திருமணத்திற்கு பின்னரும் ஹரிபிரசாத்தை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அதற்கான ஒப்பந்த பத்திரத்தை மணமகள் பூஜாவிடம் கொடுத்து கையெழுத்து பெற்றனர். இந்த பத்திரம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in