ஜேசிபி வாகனத்தில் ஊர்வலமாக வந்த மணமகன்: அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திருமணம்

ஜேசிபி வாகனத்தில் ஊர்வலமாக வந்த மணமகன்: அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திருமணம்

திருமணத்திற்கு ஜேபிசி வாகனத்தில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் மணமகன். இந்த ருசிகர சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

தற்போது திருமணத்தை பல்வேறு விதமாக நடத்தி வருகின்றனர் மணமக்கள். மணமேடைக்கு மணமகன் வரும்போது குத்தாட்டம் போட்டு அதை வீடியோ எடுத்து யூடியூப்பில் போட்டு பணம் சம்பாதிக்கின்றனர். மணமகனும் இதேபோல் நடந்து கொள்கிறார். சில மணமகன்கள் குதிரை வண்டியிலும், விலை உயர்ந்த காரிலும் திருமண மண்டபத்துக்கு வந்து கெத்துகாட்டுவார்கள். ஆனால், இந்த மணமகன் தன் திருமணத்திற்கு ஜேபிசி வாகனத்தில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாவட்டம். ஜேஸ்பூல் மாவட்டத்தில் ஜெய்ஸ்வால் என்பவர் தனது திருமணத்திற்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஜேசிபி எந்திரத்தில் ஊர்வலமாக வந்து கெத்துக்காட்டியுள்ளார். கட்டிடப் பொறியாளரான ஜெய்ஸ்வால், தனது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று எண்ணி அலங்கரிக்கப்பட்ட ஜேசிபி வாகனத்தில் அமர்ந்து திருமண மண்டபத்திற்கு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in