விராட் கோலியின் அபார ஆட்டம் - இலங்கைக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது இந்தியா!

விராட் கோலியின் அபார ஆட்டம் - இலங்கைக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது இந்தியா!

விராட் கோலியின் அதிரடி சதம் காரணமாக, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி சவாலான இலக்கினை நிர்ணயித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்கள். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த இலங்கை பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் அவ்வளவு சீக்கிரம் பலிக்கவில்லை. இந்திய அணியின் ஸ்கோர் 143 ரன்களைத் தொட்டபோது, 60 பந்துகளில் 70 ரன்களை எடுத்து ஆடிக்கொண்டிருந்த கில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அதிரடி காட்டிய ரோகித் சர்மாவும் 67 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

விராட் கோலி ஒருமுனையில் நிதானமாகவும், அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்த ஸ்ரேயாஸ் அய்யர்(28 ரன்கள்), கே.எல்.ராகுல் (39 ரன்கள்), பாண்ட்யா( 14 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் நிலைத்து ஆடிய கோலி தனது அபார சதத்தினை பதிவு செய்து அசத்தினார். இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 87 பந்துகளில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 113 ரன்களை எடுத்தார். கோலியின் கேட்சினை இலங்கை வீரர்கள் இருமுறை தவறவிட்டனர். இலங்கை அணியின் சார்பில் ரஜிதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது 374 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் இலங்கை அணி ஆடி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in