பேரன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து தாத்தா தற்கொலை

பேரன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து  தாத்தா தற்கொலை

உடல்நலமின்மையால் உயிர் இழந்த பேரனின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் விஷம் குடித்து தாத்தா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகில் உள்ள பாப்பாக்குடி காவல் நிலைய சாலையைச் சேர்ந்த விவசாயி வேலைய்யா (60). இவரது பேரன் செல்வம்(18). இவர் உடல்நலமின்மையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் செல்வத்தை தனது பொறுப்பில் வைத்து வேலைய்யா கவனித்து வந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி செல்வம் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு உயிர் இழந்தார். அதில் இருந்தே மிகவும் சோகத்துடனே வேலைய்யா காணப்பட்டார்.யாருடனும் அவர் அதிகம் பேசவும் இல்லை.

இந்நிலையில் மனவிரக்தியில் வேலைய்யா நேற்று முன் தினம் விஷம் குடித்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி வேலைய்யா இன்று பரிதாபமாக உயிர் இழந்தார். பேரன் இறந்த விரக்தியில் தாத்தா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in